திருமணத்திற்கு பிறகு கம்பி நீட்டிய மாணவர்: ஆட்சியர் அலுவலகம் முன்பு கதறும் இளம் பெண்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர், திருத்தணி அருகே உள்ள ஆகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யமுனா (வயது 20). இவர் திருத்தணி அரசு கலை கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

அதே பள்ளி அதே கல்லூரியில் படிக்கும் கரிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவா (வயது 20) இவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருவரும் சமூக வலைதளங்களில் பல்வேறு ரீல்ஸ்கள் செய்து வந்துள்ள நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருத்தணி முருகன் கோவில் அருகே தேவா தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையே கடந்த சில நாட்களாக யமுனாவிடம் தேவா பேசுவதை நிறுத்திய நிலையில் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனால் மனவேதனை அடைந்த யமுனா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு தர்மா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvallur young woman dharna collector office


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->