சாலையோரம் குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து... பயணிகளின் கதி என்ன?
Thiruvannamalai bus accident 15 injuries
திருவண்ணாமலை, வந்தவாசி அருகே இன்று மதியம் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
அப்போது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
Thiruvannamalai bus accident 15 injuries