திமுகவின் கோட்டையில் மக்கள் படும் திண்டாட்டம்.. மனம் வெந்து புழுங்கும் பரிதாபம்..!
THIRUVARUR bus stand construction work
திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட பொதுமக்கள் சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆண்டு காலமாக ஆமைவேகத்தில் நடைபெற்று வந்த திருவாரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமைபெறாத நிலையில் அண்மையில் அவசர அவசரமாக திறந்து வைக்கப்பட்டது.
உரிய மாற்று ஏற்பாடு இல்லாமல் பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால் பயணிகள், பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகள், முதியோர்கள், பெண்கள், நோயாளிகள் எனஅனைத்து தரப்பினரும் பல இன்னல் களை சந்தித்து வருகின்றனர்.
எந்தபேருந்து எந்த பேருந்து நிலையத்திற்குச் செல்லும் என்பது போன்ற தெளிவான அறிவிப்பு ஏதும் இல்லை.
எல்லா பேருந்தும் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அனைத்து பேருந்துகளும் வருவதில்லை.
சில குறிப்பிட்ட மார்க்க பேருந்துகள்மட்டும் வருகின்றன. தஞ்சாவூர் - நாகப்பட்டினம் மார்க்க பேருந்துகள் பயணிகளை புறவழிச் சாலையிலேயே இறக்கிவிட்டு செல்கிறது.இதனால் மக்கள் பழைய பேருந்துநிலையத்திற்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது.
நாகப்பட்டினத்திலிருந்து வரக்கூடிய பேருந்துகளுக்கு புதியபேருந்து நிலையம் புதிய நிறுத்தமாகஉள்ளதால் அதன் தூரத்தை கணக்கிட்டு பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
தஞ்சாவூரில் இருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் செல்வதில்லை. இதுபோன்ற தெளிவில்லாத அரசின் நடவடிக்கைகளால் மக்கள்பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது கோடைக்காலம் என்பதால் கொளுத்தும் வெயிலில் பயணிகளின் சிரமம் இருமடங்காகியுள்ளது. அரசும், போக்குவரத்து கழகமும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
English Summary
THIRUVARUR bus stand construction work