தூத்துக்குடியில் மீண்டும் மீனவர் வெட்டிக்கொலை – போலீசார் தீவிர விசாரணை! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீண்டும் ஒரு கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த 21 வயதான மீனவர் ராஜா, ஒரு நாட்டுப் படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

சங்கு குழியில் வேலை பார்த்து வந்த ராஜா மீது வடபாகம் காவல் நிலையத்தில் அடிதடி தொடர்பான வழக்குகள் இருந்தன.

இந்நிலையில், திரேஸ்புரம் கடற்கரையில் படகில் இருந்து சங்கு எடுக்கச் சென்ற நிலையில், ரத்த வெள்ளத்தில் பல வெட்டுக் காயங்களுடன் அவரது சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் கிடைத்தவுடன் கடலோர காவல் படை போலீசார் விரைந்து வந்து, சடலத்தை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பினர்.

போலீசார் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து, சம்பவத்துக்கான காரணம் மற்றும் கொலைக்குப் பின்னால் உள்ள மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே பகுதியில் இதற்கு முன் நிகழ்ந்த கொலைக்குப் பிறகு, மற்றொரு கொலை தொடர்ந்து நிகழ்ந்ததால், அப்பகுதியில் மக்கள் மத்தியில் பதற்றம் மற்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thoothukudi meenava raja murder case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->