அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்த பசுமாடுகள் - சீர்காழியில் நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள, சீர்காழியில் கடந்த சில ஆண்டுகளாக சாலைகளில் மாடுகள் திரிவது அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த மாடுகள் சாலையோரத்தில் இருக்கும் குப்பைத்தொட்டிகளில் கிடக்கும் கழிவுகளை உண்பதும் வாடிக்கையாக இருக்கிறது.

இந்த நிலையில், தேர்கீழ வீதியில் குப்பைகளில் கிடந்த உணவுப் பொருட்களை, வழக்கம் போல் சாலையில் சுற்றித்திரிந்த சில மாடுகள் சாப்பிட்டுள்ளன. அதில் மூன்று மாடுகள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்த நிலையில், ஒரு பசுமாடு வாயில் நுரையுடன் உயிருக்குப் போராடியது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மாட்டின் உரிமையாளர்கள் கால்நடை மருத்துவர்களுக்கு அளித்த தகவலின் பேரில் அவரகள் உடனடியாக வந்து உயிருக்கு போராடிய பசுமாட்டிற்கு சாலையில் வைத்தே சிகிச்சை அளித்தனர்.

இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அப்பகுதியில் உள்ள தீவனம் விற்பனை செய்யும் கடையைச் சுத்தம் செய்து கொட்டிய குப்பையில், தீவனத்துடன் எலிக்காக வைக்கப்படும் மருந்து மற்றும் குருணை மருந்தும் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையறியாமல், வழக்கம் போல் குப்பையில் இருந்த தீவனத்தை மாடுகள் மேய்ந்ததால் மூன்று பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three cows died in seerkazhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->