போலி கையெழுத்து மூலம் பல லட்சம் மோசடி: வருவாய் ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் சிக்கினர்!
Three including revenue inspectors arrested for forging signatures
மாவட்ட ஆட்சியரின் என்ஆர்ஐ கணக்கிலிருந்த ரூ.11 லட்சத்தை போலி கையெழுத்து மூலம் மோசடி செய்து எடுத்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியர்கள் யாரேனும் வெளிநாட்டில் பணிபுரியும்போது உயிரிழந்துவிட்டால், அவர்களின் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கும் வகையில் என்ஆர்ஐ வங்கிக் கணக்கு செயல்படுத்தப்படுகிறது. இந்த என்ஆர்ஐ வங்கிக் கணக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஆட்சியரின் என்ஆர்ஐ வங்கிக் கணக்கிலிருந்து ரூ.11.63 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது, என்ஆர்ஐ உதவித் தொகை பெறும் பயனாளி போன்று போலி ஆவணங்களை வழங்கி, அந்த முறைகேடு நடந்திருப்பதாகவும் சமீபத்தில் புகார் எழுந்தது, இதையடுத்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியரக துணை ஆட்சியர் ஹர்ஷத் பேகம், வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அந்த புகாரின் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தநிலையில் , திருவள்ளூரைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் தினேஷ் என்பவர் மோசடிக்காரர் என போலீசார் கண்டுபிடித்தனர்.இதையடுத்து போலீசார் நடத்திய மேல் விசாரணையில் என்ஆர்ஐ உதவித் தொகை பெரும் பயனாளி போன்று நடிக்க வைத்து, போலி ஆவணங்கள் வழங்கி, அவர் மூலம் பணம் மோசடி செய்திருந்த வருவாய் ஆய்வாளர்கள் இரண்டு பேர் ரூ.11.63 லட்சம் பண மோசடி செய்தது அப்போது தெரியவந்தது.
இதையடுத்து, வேன் ஓட்டுநர் தினேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் என மொத்தம் 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
English Summary
Three including revenue inspectors arrested for forging signatures