வெடிக்காத நிலையில் 3 சக்தி வாய்ந்த வெடி பொருட்கள்! அனுமந்தபுரத்தில் மீண்டும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் அனுமானந்தபுரத்தில் ராணுவ பயிற்சி முகாம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் மூன்று முறை இராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்த பயிற்சியின்போது சக்தி வாய்ந்த வெடி பொருட்கள், ராக்கெட் லாஞ்சர்கள், நவீன ஆயுதங்கள் கொண்டு ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்த பயிற்சியின் பொழுது மீதமுள்ள வெடிபொருட்கள், வெடிக்காத குண்டுகள், கழிவுகள் அகற்றுவது வழக்கம்.

இந்த நிலையை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பயிற்சியின் போது வெடிக்காமல் இருந்த மூன்று ராக்கெட் லாஞ்சர்களை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கும் தகவல் அளித்தனர். இதன் அடிப்படையில் ராக்கெட் லாஞ்சர்களை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மலை பகுதியில் மேற்கொண்ட சோதனையில் மூன்று சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். 

ராணுவ பயிற்சி மையம் செயல்பட்ட மலைப்பகுதிகளை சுற்றி இதுபோன்ற வெடிபொருட்கள் சிதறி இருக்கலாம் என கருதுவதால் பொதுமக்கள் மலை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையைச் சுற்றி அபாயகரமான பகுதி என அறிவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கிராம மக்கள் அப்பகுதி செல்லாத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்களை போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three more explosives record in hanumanthapuram


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->