நாமக்கல்லில் விபரீதம்; வயலில் தண்ணீர் பாய்ச்சிய போது வேலியில் மின்சாரம் பாய்ந்ததால்,02 குழந்தைகள் உட்பட மூவர் பலி..!
Three people including two children died when a fence electrocuted them while watering their fields
நாமக்கல் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உட்பட மூவர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ளது ஆண்டாபுரம் கிராமத்தின் உள்ள வயல் ஒன்றில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது வேலியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்நிலையில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 05 வயது சுஜித் மற்றும் 03 வயது ஐவிலி ஆகிய குழந்தைகள் மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
இருவரின் அலறலை கேட்டு காப்பாற்ற சென்ற 50 வயது பாட்டி இளஞ்சியமும் 50 றிரிழந்துள்ளார். பேரன்கள்,மற்றும் பாட்டி மின்சாரம் பாய்ந்து இறந்து போனதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Three people including two children died when a fence electrocuted them while watering their fields