மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை - விசாரணையில் சிக்கிய பெண் கைதி.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மெதாம்பெட்டமின் போதை மருந்து சப்ளை செய்யப்பட்டு வந்தது. இதை உட்கொள்பவர்களுக்கு நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதுடன், தூக்கம் கெடும். தூக்கம் வருவதற்காக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்தக் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தக் குழு தீவிர விசாரணை நடத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 102 கிராம் மெதாம்பெட்டமின் போதை மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கர்நாடக மாநிலம் பெங்களூரு, தார்வார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடத்தி வந்து, இங்கு சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது.

மேலும், இந்த போதை மருந்து கடத்தலுக்கு முக்கியமாக செயல்பட்டது கென்யா நாட்டை சேர்ந்த இவி பொனுகே என்ற பெண் என்பதும் இவர், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கூட்டாளியான உகாண்டா நாட்டை சேர்ந்த காவோன்கே என்பவரை சந்திக்க சென்றபோது கோவை போலீசார் மடக்கிப்பிடித்து காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.

அதாவது, கைதான கென்யா பெண் இவி பொனுகே, தார்வார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சட்டக்கல்வி படிப்பதற்காக தங்கி உள்ளார். படிப்பை முடிக்கவில்லை. அவரது விசாவும் காலாவதியாகி உள்ளது. தொடர்ந்து தார்வார், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தங்கி ஆன்லைன் மூலம் போதை மருந்து சப்ளை செய்துள்ளார். 

உகாண்டா நாட்டை சேர்ந்த அவரது கூட்டாளி காவோன்கே சிறையில் இருந்து கொண்டே போன் மூலம், வரும் தகவலின் அடிப்படையில் அந்தந்த இடங்களுக்கு போதை மருந்தை அனுப்பி வைத்துள்ளார். இதில் கிடைக்கும் பணத்தை, கென்யா பெண் இவி பொனுகே, உகாண்டா நாட்டை சேர்ந்த மற்றொரு நண்பரான டேவிட் என்பவர் டெல்லியில் தொடங்கி இருந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்பி அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

இந்த கணக்கில் ரூ.49 லட்சம் இருந்துள்ளது. அதனை முடக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூரு சிறையில் இருந்து கொண்டே போதை மருந்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வரும் காவோன்கே என்பவரை கர்நாடக போலீஸ் மூலம் கைது செய்யவும் கோவை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைதான கென்யா பெண் உள்பட மூன்று பேரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for drugs sales in coimbatore


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->