தூத்துக்குடி || காதலியின் திருமணத்தை தடுக்க வந்த காதலன் - பெண் வீட்டார் செய்த கொடூரச் செயல்.! - Seithipunal
Seithipunal


காதலியின் திருமணத்தை தடுக்க வந்த காதலன் - பெண் வீட்டார் செய்த கொடூரச் செயல்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் அருகே சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்காமணி மகன் மாரியப்பன். கோயம்புத்தூரில் பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இதையறிந்த பெண் வீட்டார் உடனடியாக அந்தப் பெண்ணுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவருடன் திருமணம் நிச்சயித்து, அதன் படி நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே மாரியப்பன் கடந்த 18 ம் தேதி சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

இந்த நிலையில் அவர் கடந்த 19ம் தேதி காலை கிராமத்தின் பனங்காட்டுப் பகுதியில் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதிவாசிகள் குளத்தூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் படி போலீசார் விரைந்து வந்து மாரியப்பனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்தச் சம்பவம் இடத்தில் தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அந்த விசாரணையில், மாரியப்பன் 18ம் தேதி இரவு தான் காதலித்த பெண்ணை சந்திக்க முயற்சி செய்த போது, அப்பெண்ணின் உறவினர்கள் மாரியப்பனை தடுத்துள்ளனர். அதனால், அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். 

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த மாரியப்பனை, பெண்ணின் உறவினர்கள் கழுத்திலும் அடி வயிற்றிலும் மிதித்து கற்களை தூக்கிப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இதைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three peoples arrested for kill young man in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->