அதிகாலையில் அதிர்ச்சி - வேலூர் அருகே விபத்தில் சிக்கி 3 பேர் பலி.!
three peoples died for accident in vellore
வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் கொணவட்டம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சர்வீஸ் சாலையில் நின்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவலளிக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலின் படி போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்தவரை மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் உயிரிழந்தவர்களை மீது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் விபத்தில் உயிரிழந்தவர்கள் சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
three peoples died for accident in vellore