திருப்பத்தூர்|| தண்ணீர் பிடித்த அண்ணன் மகன் - ஆத்திரத்தில் கல்லால் அடித்த சித்தப்பா.!!
three peoples injured attack two gangs in tirupathur
வாணியம்பாடி அருகே முன் விரோதம் காரணமாக இரு தரப்பினர் கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்-பத்மா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி பதினாறு வயதில் நாகராஜ் என்ற மகன் உள்ளார். இருப்பினும், தம்பதியினர் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்..
இந்த நிலையில், நாகராஜ், தனது சித்தப்பா வீட்டின் அருகே உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துள்ளார். இதைப்பார்த்து, ஆத்திரமடைந்த சிறுவனின் பாட்டி மற்றும் சித்தப்பா நாகராஜ் தண்ணீர் பிடித்தது தொடர்பாக பத்மாவிடம் சண்டை போட்டுள்ளனர்.
சிறிது நேரத்தில் இந்த சண்டை பெரிதாகி இரு தரப்பினரும் கற்கள் மற்றும் கட்டைகளால் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில், மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples injured attack two gangs in tirupathur