தூத்துக்குடி : பிறந்த குழந்தையை பார்க்க அனுமதி மறுப்பு - ஆத்திரத்தில் மருத்துவரைத் தாக்கிய பெண்கள்.! - Seithipunal
Seithipunal


பிறந்த குழந்தையை பார்க்க அனுமதி மறுப்பு - ஆத்திரத்தில் மருத்துவரைத் தாக்கிய பெண்கள்.!

தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேஷ்குமார்-அன்னத்தாய். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் பிரசவத்திற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த நிலையில் இந்தக் குழந்தையைப் பார்ப்பதற்காக அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

பொதுவாகவே அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர் நேரத்தில் மட்டுமே உறவினர்கள் பார்க்க முடியும். ஆனால், அன்னத்தாயை பார்ப்பதற்காக மூன்று பெண்கள் பார்வை நேரம் முடிந்த பிறகு வந்துள்ளனர். இதனால் பிரசவ வார்டு காவலாளி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. 

இதையடுத்து மூன்று பெண்களும் அந்த காவலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் பணியில் இருந்த பெண் மருத்துவர் அர்ச்சனா, பார்வையாளர் நேரம் முடிந்துவிட்டது. வேண்டுமானால் குழந்தையை மட்டும் வெளியில் எடுத்துவந்து காட்டுமாறுத் தெரிவித்தார். 

இதனால் ஆத்திரமடைந்த மூன்று பெண்களும் குழைந்தைக்காக தாங்கள் வாங்கி வந்த பவுடர், சோப்பு உள்ளிட்டவற்றை மருத்துவர் அர்ச்சனா மீது தூக்கி எறிந்து அவரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மூன்று பெண்களும் யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three womans attack government hospital doctor in thoothukudi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->