டாஸ்மாக் கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய இளைஞர்கள் கைது..! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் அருகே இரணியம்மன் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை  ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்கள் டாஸ்மாக் கடையில் மது வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்றனர். 

அப்போது அதில் ஒரு வாலிபர் திடீரென தனது கையில் வைத்திருந்த நாட்டு வெடி குண்டை டாஸ்மாக் கடை மீது வீசிவிட்டு அங்கிருந்து இருவரும் தப்பிச்சென்றனர். இதனால் டாஸ்மாக் கடையின் முன்புறம் உள்ள இரும்பு கேட் சேதம் அடைந்தது. இந்த காட்சிகள் டாஸ்மாக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் தெளிவாக பதிவாகி உள்ளது. 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீஸ்காரர்கள் கருப்புசாமி, வேலன், கங்காதரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபரை வலை வீசி தேடி வந்தனர். 

இந்நிலையில் டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வீசிய வழக்கில் வண்டலூர் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் (வயது 22), பாலமுருகன் (24), ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

threw a country bomb on tasmak


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->