உதயநிதிக்கு அரியணை! திமுகவில் வெடிக்கும் பூகம்பம்! அடுத்தடுத்து அதிர்ச்சி பேட்டி!
Throne for Udhayanidhi Earthquake in DMK Successive shock interview
இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சென்னை கோபாலபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணு கோபால சுவாமி கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் செய்த பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது :- செப் 25 வரை எங்களது முழு கவனம் உறுப்பினர் சேர்க்கை. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்து இறங்க வேண்டும் என்பதே எங்களது ஒற்றை குறிக்கோள்
நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க.வின் நிகழ்ச்சியில் பங்கேற்று திமுக ஆலமரம் போன்றது எனக் கூறியிருந்தார். தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் அப்படி தான் ஆலமரம் என்றார்கள். அங்கு ஆட்சி மாறி இருக்கிறது. ரஜினிகாந்த் தி.மு.க.வில் புயலையும் சுனாமியையும் உருவாக்கி உள்ளார்.
தி.மு.க கட்சிக்கு கடுமையாக உழைத்த துரைமுருகன் இன்றும் ஸ்டாலினுக்கு கீழ் இருக்கிறார். அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் -க்கு கீழும் இருக்க வேண்டியுள்ளது. இந்த காரணத்தால் தான் வாரிசு அரசியலை நாங்கள் வேண்டாம் என்று ஒதுக்குகிறோம்.
உதயநிதி ஸ்டாலின் துரைமுருகனின் பேச்சை மட்டும் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கூறியுள்ளார். அப்போ நடிகர் ரஜினிகாந்தின் பேச்சை சீரியசாக எடுத்துக் கொள்ளலாமா?
தி.மு.க. கட்சி தொண்டர்கள் இதனை சிந்திக்க வேண்டும். சீனியர்கள் பலரிடம் இருந்த பொறுப்புகள் தற்போது மற்றவர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது பா.ஜ.க.வின் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மூத்தவர்களுக்கு பா.ஜ.க.வில் அதிகம் மரியாதை கிடைக்கும். அதனால் உறுப்பினராக பா.ஜ.க.வில் சேர்ந்து கொள்ளுங்கள்.
முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "உதயநிதி அரியணை ஏறும்போது கட்சியில் பூகம்பம் வெடிக்கும். எனவே முக ஸ்டாலின் உஷாரா இருக்கணும்னு, ரஜினிகாந்த வார்னிங் கொடுத்து பேசி இருக்கார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Throne for Udhayanidhi Earthquake in DMK Successive shock interview