மறைமலைநகர் : பயணியை புரட்டி எடுத்த டிக்கெட் பரிசோதகர் - அதிரடி உத்தரவிட்ட மனித உரிமைகள் ஆணையம்.!!  - Seithipunal
Seithipunal


பயணியை புரட்டி எடுத்த டிக்கெட் பரிசோதகர் - அதிரடி உத்தரவிட்ட மனித உரிமைகள் ஆணையம்.!! 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மறைமலைநகரைச் சேர்ந்தவர் தினேஷ். தனியார் ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வரும் இவர் நேற்று முன்தினம் கிண்டியில் இருந்து திருவான்மியூர் நோக்கிச் செல்லும் மாநகர பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

அப்போது பயணசீட்டு பரிசோதகர்கள் பேருந்தில் ஏறி பயணிகளிடம் பயணசீட்டு பரிசோதனையில் ஈடுபட்டனர். அதன் படி, தினேஷிடம் பயணசீட்டுக் குறித்து கேட்டபோது, தான் முந்தைய பேருந்து நிறுத்தத்தில் ஏறியதாகவும், பேருந்தில் அதிகப்படியான கூட்ட நெரிசல் இருந்ததால் பயணிகளிடம் பணத்தைக் கொடுத்து பயணசீட்டு எடுக்க கூறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதைக் கண்டுகொள்ளாத பயணசீட்டு பரிசோதகர், தினேஷை இழுத்து பேருந்தை விட்டு கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கி தகாத வார்த்தையால் பேசி செல்போன் மற்றும் உடைமைகளை பறித்துள்ளார். இதைபார்த்த சகபயணிகள் பரிசோதகரை தடுத்து நிறுத்தி தினேஷை விடுவித்தனர்.

இதற்கிடையே பயணசீட்டு பரிசோதகர் பயணியைத் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தினேஷ், தன்னை தாக்கிய பயணசீட்டு பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்த புகாரின் படி, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணையில் ஈடுபட்டு, இந்த விவகாரம் தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் சென்னை மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாத பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றுத் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ticket inspector attack passenger in maraimalainagar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->