பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த ரெயில் கட்டணம் - திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?
ticket price increase in train
நீண்ட நேரம் பயணம் செய்யும் மக்கள் பெரும்பாலும் ரெயில் பயணத்தையே விரும்புவார்கள். அதனால், தெற்கு ரயில்வே பயணிகளுக்கு ஏதுவாக அவ்வபோது பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. இந்த நிலையில், சாதாரண பேசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றும் முயற்சியில் தெற்கு ரெயில்வே ஈடுபட்டுள்ளது.
இதன் மூலம் பயண நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால், டிக்கெட் கட்டணம் தான் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- சென்னை டூ திருப்பதி பேசஞ்சர் ரயிலில் பயணசீட்டு கட்டணம் 35 ரூபாயாக இருந்தது. இது தற்போது 70 ரூபாயாக அதிகரித்துள்ளது.
சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் செல்லும் ரயில், சென்னை எழும்பூரிலிருந்து புதுச்சேரி செல்லும் ரயில் உள்ளிட்டவற்றின் பயணசீட்டு கட்டணம் 65 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக அதிகரித்திருப்பதாக தெரிகிறது. இதேபோல், தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.
பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் பேசஞ்சர் ரயில்கள், மெமு மற்றும் டெமு ரயில்கள் உள்ளிட்டவை எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டு டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் விளைவாக கடந்த 22ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதாவது, கொரோனா காலகட்டத்திற்கு முன்பு எவ்வாறு டிக்கெட் கட்டணம் இருந்ததோ, அதே கட்டணம் மீண்டும் பின்பற்றப்படும். கட்டண உயர்வு திரும்ப பெறப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
ticket price increase in train