பரந்தூர் விமான நிலையம் - அனுமதி கேட்டு TIDCO மீண்டும் விண்ணப்பம்.!!
TIDCO reapply for parandur green way airport
சென்னையின் இரண்டாவது பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைப்பதற்கான அனைத்து முதற்கட்ட பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. பழந்தூரில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5368 ஏக்கர் நிலத்தில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக பறந்தூரில் நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள இரண்டு விமான ஓடுபாதைகளுடன் விமான நிலையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்ய அனுமதி கோரி தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான டிட்கோ ஏற்கனவே விண்ணப்பித்திருந்தது.
இந்த நிலையில் சிறிய மாற்றங்களுடன் டிட்கோ நிறுவனம் பரந்தூர் விமான நிலையத்திற்கான சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு அனுமதிக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
TIDCO reapply for parandur green way airport