முதுமலையில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது! 191 இடங்களில் கேமராக்கள் பொருத்தம்! - Seithipunal
Seithipunal


முதுமலை வனப்பகுதியில் 191 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி புலிகள் உட்பட வனவிலங்கு குறித்தான கணக்கெடுப்பு பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு, முதுமலை, கார்குடி, நிலக்கோட்டை, மசினகுடி சார்ந்த வன சகங்கள் உட்பட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணிக்காக தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியுள்ளது.

இதற்காக 191 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் தலா இரண்டு தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முதுமலையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியானது இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு இரண்டு கேமராக்கள் வீதம் 191 இடங்களில் 382 கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணி ஐந்து நாட்களுக்குள் முடிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி தொடங்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கேமராக்களில் பதிவாகும் புகைப்படங்கள், வீடியோக்கள் பதிவிறக்கம் செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இந்த பணியானது 40 நாட்களுக்கு நடைபெறும். முதுமலையில் முதற்கட்டமாக தொடங்கப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு முடிவு பெற்ற பின் இரண்டாம் கட்டமாக முதுமலைக்கு வெளிவட்ட பகுதியில் கணக்கெடுப்பு பணி நடைபெறும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiger census has started in Mudumalai forest area


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->