நெல்லையில் புலிகள் நடமாட்டமா? - அதிகாரிகள் சொன்ன அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தெற்கு பாப்பான் குளம் பகுதியில் நேற்று புலி நடமாட்டம் இருப்பதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இந்தத் தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் வனக்கோட்ட துணை இயக்குனரின் உத்தரவின் படி, புலி நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் சமூக வலைதளங்களில் பரவிய புலியின் புகைப்படம் மேற்கு வங்காளத்தில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து அதிகாரிகள் மணிமுத்தாறு மற்றும் தெற்கு பாப்பான் குளம் பகுதிகளில் புலி நடமாட்டம் ஏதும் இல்லை என்றும், இதனால், பொதுமக்கள் அச்சப்பட தேவை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tiger not run in nellai forest department officers info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->