டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு முடிவுகள்! மத்தியில், தமிழகத்தில் யார் கை ஓங்கியுள்ளது?!
Timews now EDG survey 2023
வருகின்ற 2024 ஆம் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தும் என்ற கருத்துக்கணிப்பை, டைம்ஸ் நவ் இந்தியா செய்தி நிறுவனமும், இடிஜி நிறுவனமும் இணைந்து கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக இந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் சுமார் 296 முதல் 326 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும் என்று அந்த கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
எதிர்க்கட்சிகளின் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணி 160 முதல் 190 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும், அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் திமுக 20 முதல் 24 தொகுதிகளிலும், அதிமுக நான்கு முதல் எட்டு தொகுதிகளிலும், பாஜக ஒரு இடத்திலும், காங்கிரஸ் கட்சி 9 முதல் 11 இடங்களிலும், பிறக்கட்சிகள் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது.
மேலும் திமுக கூட்டணி 33.50 சதவீத வாக்குகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், அதிமுக 17.30 சதவீத வாக்குகளை கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது.
பாஜக 8.90% வாக்குகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மற்ற கட்சிகள் 24.70% வாக்குகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
English Summary
Timews now EDG survey 2023