சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை பயன்படுத்தும் குவாரிகள், அதிரடியாக நடவடிக்கை எடுத்த திருநெல்வேலி ஆட்சியர் !!
Tirunelveli Collector took action against quarries using powerful explosives
திருநெல்வேலியில் இயங்கி வரும் ஒரு தனியார் கல் குவாரியில் முறைகேடாக உயர்ரக சக்திவாய்ந்த வெடி பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், அங்கே வசிக்கும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி, குவாரியை மூடக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கே.பி.கார்த்திகேயனிடம் அப்பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.
"கிட்டத்தட்ட 300 குடும்பங்கள் தத்தனூத்தில் குடி இருக்கின்றனர். இந்த குடியிருப்புப் பகுதியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், ஒரு தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து கல் குவாரியை நிர்வகித்து வருகிறது. அந்த குவாரியின் விதிமீறல்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அங்குள்ள மக்கள் மனு அளித்ததை தொடர்ந்து, சென்ற ஆண்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
ஆனால் தற்போது, அந்த கல் குவாரி மீண்டும் இயங்க துவங்கியது. அந்த குவாரியில் அதிசக்திவாய்ந்த வெடிகளை வெடிக்க வைத்து கற்களை உடைப்பதால், அந்த வெடியின் தாக்கம் மற்றும் சத்தத்தால் அங்குள்ள பொது மக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரமத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாவதோடு, வீடுகளும் அதிர்ச்சியில் குலுங்குகின்றன. அந்த குவாரி இயங்குவதை தடுக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், மாஞ்சோலை மலையில் இருந்து வெளியேற்றப்படும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வேறு ஒரு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்து தர வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தாமிரபரணி படுகாப்பு இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
"நீதிமன்ற உத்தரவுப்படி, தேயிலை தோட்டம் அமைந்துள்ள, 8,000 ஏக்கர் நிலத்தில், மாநில அரசு மீண்டும் காடுகளை வளர்க்க வேண்டும். தொழிலாளர்கள் மலையில் தங்கி, பயிர் சாகுபடி செய்ய, மானியம் வழங்க, அரசு அனுமதிக்க வேண்டும்,' என, அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
English Summary
Tirunelveli Collector took action against quarries using powerful explosives