மாடு முட்டி நடுரோட்டில் விழுந்த ஊழியர்... கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த விபரீதம்! மாநகராட்சி அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை பகுதியில் பிரதான சாலையில் இரண்டு மாடுகள் சண்டையிட்டு கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற நீதிபதி ஊழியர் வேலாயுதராஜை இரண்டு மாடுகள் முட்டியுள்ளன. 

இதனால் நிலை தடுமாறி சாலையின் நடுவே விழுந்த வேலாயுதராஜ் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பேருந்து ஏறி இறங்கியதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகிய பரவி வருகிறது. 

மாடுகளால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகம் அதிரடி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

சாலைகளில் மாடுகள் திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாடு வளர்ப்போர் பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மாடுகளை கட்டி வைத்து பராமரித்து கொள்ள வேண்டும்.

சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் மாநகராட்சி ஊழியர்களால் மாடுகள் பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த வகையில் இன்று ஒரே நாளில் திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 47 மாடுகள் பிடிக்கப்பட்டு சுமார் ரூ. 13,000 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli cow hit person died after boarded govt bus


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->