திருநெல்வேலியில் ஒரே நாளில் 5 ஆயிரத்தை தொட்ட மல்லிகை பூ.! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியில் உள்ள பூ மார்க்கெட்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கு வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர். அதேபோல், பொது மக்களும் வீட்டிற்கு தேவையான பூக்களை வாங்கி செல்கின்றனர்.

இங்கு வழக்கமாக பூ வரத்து குறைவின் போதும், சுபமுகூர்த்த நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களின் போதும் பூக்களின் விலை சற்று அதிகமாக காணப்படும். 

இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் என்று தொடர்ந்து இரண்டு நாட்கள் சுபமுகூர்த்த தினங்கள் வருகிறது. இதனால், இன்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நெல்லையில் நேற்று 1 கிலோ மல்லிகை பூ ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதைத்தொடர்ந்து இன்று ஒரேநாளில் ரூ.1,500 உயர்ந்து 4,500-க்கு விற்பனை செய்யபடுகிறது. இருப்பினும் தேவை அதிகம் இருப்பதால், ஏராளமானோர் போட்டி போட்டு பூக்களை வாங்கி செல்கின்றனர். 

இதையடுத்து, மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்ட பிச்சிப்பூ இன்று ரூ.1,800-க்கும், ஒரு கட்டு கொண்ட ரோஜாப்பூ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக பூ வியாபாரி ஒருவர் தெரிவித்ததாவது, "தற்போது பூக்களின் வரத்து சற்று குறைந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், தொடர்ந்து இரண்டு நாட்கள் முகூர்த்த நாட்களாக வருவதால் பூக்களின் தேவை சற்று அதிகரித்துள்ளது. இதனால் இன்று பூக்களின் விலை கடுமையாக  உயர்ந்துள்ளது. 

ரூ.4,500 வரை விற்கப்படும் மல்லிப்பு இன்று மாலை மற்றும் நாளை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்து காணப்பட்டாலும் மல்லிகை பூ மற்றும் பிச்சிப்பூக்களுக்கு தற்போது தட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirunelveli flower market jasmine price increase


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->