தமிழகத்திற்குள் மதத்தின் பெயரால் யாரும் நுழைய முடியாது - கனிமொழி பேச்சு.! - Seithipunal
Seithipunal


நேற்று திருநெல்வேலியில் பொருநை இலக்கிய திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி மூலம் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளதாவது:- 

"தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதிகமாக இலக்கிய விழாக்கள் நடத்தப்படுகிறது. இந்த விழாக்கள் தமிழை வளர்ப்பதற்காகவே நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு மதுரை மற்றும் சென்னையில் மட்டும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்படும். 

ஆனால், தற்போது முதலமைச்சரின் உத்தரவுப்படி மாவட்டந்தோறும் புத்தக திருவிழா நடத்துவதால், அனைத்து மக்களுக்கும் எளிதாக புத்தகங்கள் கிடைக்கிறது. புத்தகம் வாசிப்பு என்பது மிக முக்கியம் ஆகும். 

நமது அண்டை மாநிலமான கேரளாவில் கோவில் விழாக்களை இலக்கியம் சார்ந்து நடத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும் கொண்டாடுவதற்கு மறந்து விட்டார்கள். மறந்து போனதை நினைவு படுத்துவதற்கு தான் இந்த இலக்கிய திருவிழா. 

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதியின் புத்தகங்கள் நம்மை சரியான திசையில் அழைத்து செல்லும். அதனை படிக்க, படிக்க சிந்தனைகள் விரிவாகும்.  திராவிட எழுத்தாளர்களின் எழுத்துக்கள் சமூக சிந்தனையை மேம்படுத்தி உள்ளது. இந்த புத்தகங்களை சமூக மக்களின் விடுதலைக்காக திராவிட எழுத்தாளர்கள் எழுதினார்கள்.

இன்றைய காலகட்டத்தில் எடுக்க கூடிய சினிமாக்களில் பெண்ணடிமை உள்ளது. இதற்கு முன்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மந்திரிகுமாரி திரைப்படத்தில் பெண் விடுதலை குறித்து எழுதினார். தற்போது, தமிழை மீட்டெடுக்க வேண்டிய கால கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். நமது மொழி மற்றும் கலாச்சாரம் அழிந்து போய் விடக்கூடாது. 

தமிழகத்திற்குள் சாதி மற்றும் மதத்தின் பெயரால் யாரும் நுழைந்து விட முடியாது. அதற்கு திராவிட எழுத்தாளர்கள் எழுதிய எழுத்துக்கள் தான் காரணம். இன்று தமிழை கொண்டாடுவதாக கூறுகிறவர்கள், தமிழுக்கு உரிய அங்கீகாரம் தராமல், நீதிமன்ற மொழியில் தமிழை அனுமதிப்பதற்கும் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.

நாம் அனைவரும், நமது இலக்கியம், கருத்துகள் மற்றும் சுய மரியாதையை காப்பதற்கு தமிழின் பெருமையை புரிந்து கொள்ள வேண்டும். அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் கடமை நமக்குள்ளது" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirunelveli porunai festival kanimozhi speach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->