திருப்பத்தூர் | திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்ட கிராம மக்கள்: காரணம் என்ன?
Tirupathur Villagers road blockade
திருப்பத்தூர், வெங்களாபுரம் ஊராட்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கடந்த சில மாதங்களாகவே சீரான குடிநீர் வழங்குவதில்லை.
திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைக்கினறனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திருப்பத்தூர்-திருவண்ணாமலை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த அரசு பேருந்து சிறைபிடித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் தொடர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார், உயர் அதிகாரிகளிடம் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். பொதுமக்கள் திடீரென அரசு பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பரபரப்பு நிலவியது.
English Summary
Tirupathur Villagers road blockade