தொடரும் கனிம வள திருட்டு! தடுக்க முடியாத ஊராட்சி மன்ற உறுப்பினரின் அடுத்தகட்ட முடிவு! - Seithipunal
Seithipunal


திருப்பூர், மடத்துக்குளம் அருகே நடைபெறும் கனிம வள திருட்டை தடுத்து நிறுத்த முடியாததால் தனது பதவியை ஊராட்சி மன்ற உறுப்பினர் ராஜினாமா செய்துள்ளார். 

மடத்துக்குளம் அருகே உள்ள ராமேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் ஊராட்சி வார்டு உறுப்பினராக உள்ளார். 

இவர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார். பின்னர் இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, ''நான் ஊராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் நடைபெறும் கிராவல் மண் உட்பட கனிம வளங்களை கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க முயன்றேன். 

இதனால் சிலர் என் மீது பொய் வழக்கு போடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். பொதுமக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊராட்சி மன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன்.  

ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எந்தவித நலத்திட்டத்தையும் நிறைவேற்ற வில்லை. எனவே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். 

என்னுடைய ராஜினாமா கடிதத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளேன்'' என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவிக்கையில், வார்டு உறுப்பினரின் ராஜினாமா கடிதம் ஆட்சியரின் கவனத்திற்கு முறைப்படி மேல் நடவடிக்கைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupur Panchayat council member resignation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->