காற்று மாசுபாடு குறைந்த நகரம் - தமிழகத்தின் முதன்மை இடத்தை பிடித்த மாவட்டம்..! எது தெரியுமா?
tirupur won first place of low air city pollution
தமிழகத்தில் ஜவுளித்துறையில் சிறந்து விளங்கும் மாவட்டமான திருப்பூரில் இருந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்திற்கு துணிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி தெரிவித்ததாவது:-
"ஜவுளித்துறையில் வளம் குன்றா வளர்ச்சி மற்றும் போட்டித்தன்மையை ஆதரிப்பதற்கு ஏற்றுமதியாளர்கள் சங்கம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மார்பக மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பரிசோதனைகள் வழங்கும் பணிகளை பெண்கள் தொழில்முனைவோர் துணை அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர்.
இந்த விழிப்புணர்வு மூலமாக 5 ஆயிரம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர். உலகளாவிய காற்று மாசுபாடு குறைவாக உள்ள நகரம் குறித்து கடந்த ஆண்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவில் 3 நகரங்களில் காற்று மாசுபாடு குறைவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அந்த மூன்று நகரங்களில் திருப்பூர் முதன்மை இடத்தில் உள்ளது. சுற்றுச்சூழல் ஆய்வின்படி வனத்துக்குள் திருப்பூர் திட்டம் மூலமாக திருப்பூரில் வெப்பநிலை கடந்த கோடையில் கோவையை விட 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
tirupur won first place of low air city pollution