பள்ளி அளவில் 12-ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த இளம்பெண் தற்கொலை: கிடைத்த உருக்கமான கடிதம்!
Tiruvallur young woman committed suicide received letter
திருவள்ளூர், திருமுல்லைவாயிலை சேர்ந்தவர் முருகன். இவரது மூத்த மகள் ஸ்வேதா (வயது 21) இவர் தனியார் கல்லூரியில் பிகாம் பட்டப்படிப்பை கடந்த ஆண்டு முடித்து பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை தேடி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஸ்வேதா அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு சென்று அதில் தேர்ந்தெடுக்கப்படாமல் வீடு திரும்பியதாக தெரிகிறது.
இதனால் மனவேதனை அடைந்த ஸ்வேதா திடீரென அவரது அறைக்குச் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரம் கழித்து அவரது பெற்றோர் சென்று பார்த்த போது ஸ்வேதா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்வேதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார், அவரது வீட்டில் நடத்திய சோதனையின் போது ஸ்வேதா எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், குடும்பத்திற்கு பாரமாக நான் இருக்க விரும்பவில்லை. என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை.
என் அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். தங்கையை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். பூனையை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்கொலை செய்து கொண்ட ஸ்வேதா 12 ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்லூரி படிப்பை முடித்த இவர் வேலை கிடைக்காத நிலையில் அவரது தங்கை நல்ல நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த ஸ்வேதா தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Tiruvallur young woman committed suicide received letter