நீரிழிவு நோயால் அவதிபட்டவர் தற்கொலை! - Seithipunal
Seithipunal


நீரிழிவு நோயால் அவதிப்பட்ட தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்:

கன்னியாகுமரி: திருவட்டார் அருகே திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 67). இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் ஆனதால் இவர் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். 

தேவதாஸ் நீரிழிவு நோயால் பெரிதும் அவதிப்பட்ட நிலையில் இவருடைய 2 கண்களிலும் பார்வை குறைய தொடங்கியது. இதனால் தேவதாஸ் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 

சிகிச்சை அளித்தும் சர்க்கரை நோய் குறையாததால் மன அழுத்தத்தில் இருந்த தேவதாஸ் விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளி மயங்கி படுத்துள்ளார்.

அதனை பார்த்த மனைவி, மகனுக்கு தகவல் தெரிவித்து, மகனும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேவதாசை மீட்டு குலசேகரம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

பின்னர் தேவதாஸை மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேவதாஸ் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். 

இது குறித்து தேவதாஸ் மனைவி ராஜம் திருவட்டார் போலீசில் புகார் கொடுத்ததில் துணை தலைமை காவலர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tiruvattar diabetes patient commits suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->