சட்டப்பேரவையில் இபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்! அமைச்சர் கொடுத்த பதில் !
TN Assembly 2023 Corona issue EPS
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதில், "தமிழகத்தில் நேற்று 400 பேருக்கு கொரனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் வைரஸ் பாதிக்கப்படுவதாக செய்தி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் காய்ச்சல் முகாம் நடத்த வேண்டும். வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாஸ்க் அணிவிப்பது தொடர்பாக அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். மருத்துவமனைகளில் கொரானாவுக்காக தனி வார்டு அமைக்க வேண்டும்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இந்த சிறப்பு தீர்மானம் மற்றும் கொரோனா தொற்று பரவல் குறித்து சட்டப்பேரவையில் விளக்கமளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லை என்றாலும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொரோனா பல்வேறு பெயர்களில் உருமாறி எப்படி வந்தாலும் தமிழக மக்களை முதலமைச்சர் காப்பார். தற்போது வந்திருக்கும் கொரோனா பாதிப்பு உயிர் பறிக்கும் பாதிப்பாக இல்லை.
காய்ச்சல், தொண்டை வலி ஆகியவை ஏற்படுகிறது, இதனால் ஆக்சிஜன் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தேவைப்படவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக கூடி கொண்டிருப்பதால், இதனை 4வது அலையாக கருத முடியாது. கொரோனா தொற்று அதிகரித்தால் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும்.
பொதுமக்கள் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஆனால் கட்டாயப்படுத்தவில்லை. ஏப்ரல் 1ம் தேதி முதல் மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது"
இணை நோய் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எந்த பாதிப்பு வந்தாலும் அவர்கள் இறப்பை சந்திக்க நேரிடும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
English Summary
TN Assembly 2023 Corona issue EPS