இந்தியாவில் முதல்முறையாக... சட்டப்பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
TN Assembly 2024 Minister announce MiniBusService
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச்சட்ட முன்வடிவை வீட்டு வசதி மற்றும் நகரப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர்கள் பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் முதல்முறையாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ரூ.13 கோடி மதிப்பில் அதினவீன மூளை இரத்தநாள ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
சென்னை மதுரை மாவட்டங்களை தொடர்ந்து சேலம் மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய தாய்சேய் நல கருத்தரித்தல் மையம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை எழும்பூர் அரசு தாய்-சேய் நல மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இம்மையம் அமைக்கும் பணி நடந்து வருகின்றது.
நேற்றைய அறிவிப்பின்படி கோவை, சேலத்தில் இந்த ஆண்டு செயற்கை கருத்தரிப்பு மையங்கள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் சட்டப்பேரவையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
மேலும், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அரசு பேருந்துகள் செல்ல முடியாத கிராமப் பகுதிகளில் அதிகம் மினி பேருந்து வழித்தடங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் மினி பேருந்து புறக்கணிக்கப்பட்டது. தற்போது திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு தற்போது மினி பேருந்துகள் கிராமப் பகுதிகள் வரை சென்று வருகிறது" என்று தகவல் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எ.வ.வேலு விடுத்த அறிவிப்பில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 4 நகரங்களில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்படும். ஜவ்வாது மலைக்கு போளூர் வழியாக புறவழிச் சாலை அமைக்கும் பணி இந்த ஆண்டு தொடங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN Assembly 2024 Minister announce MiniBusService