எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த CM ஸ்டாலின்! கூடவே வைத்த ஒரு கோரிக்கை!
TN Assembly CM mk stalin Edappadi Palaniswami
வக்பு வாரிய திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபை தீர்மானம்
தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.
தீர்மானம் & தீர்மானத்தின் மீது முதல்வர் ஸ்டாலின் பேசிய முக்கிய அம்சங்கள்:
அதிமுக தீர்மானத்திற்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தது. பாஜகவைத் தவிர, அனைத்து கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன.
ஆதரவு தெரிவித்த அதிமுகவுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்தார். இருமொழிக் கொள்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு அவர் பாராட்டுத் தெரிவித்தார்.
"அடுத்த முறை டெல்லி செல்லும்போது, வக்பு திருத்தச்சட்டத்தை திரும்பப்பெறுமாறு வலியுறுத்துங்கள்" என அவர் கேட்டுக்கொண்டார்.
இதனுடன், வக்பு வாரிய திருத்தச்சட்டத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
English Summary
TN Assembly CM mk stalin Edappadi Palaniswami