#BREAKING | தமிழக சட்டப்பேரவையில் இரு நிமிடம் மௌன அஞ்சலி! சென்னையை உலுக்கிய சோக சம்பவம்! - Seithipunal
Seithipunal


சென்னை : மடிப்பாக்கத்தை அடுத்த மூவரசம்பேட்டை தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 5 பேருக்கு இன்று சட்டப்பேரவையில் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம். மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக நேற்று காலை 9.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கி உள்ளனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, திரு. சூர்யா (வயது-22), திரு. பானேஷ் (வயது-22), திரு.ராகவன் (வயது-22) திரு. யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் திரு. ராகவன் (வயது-18) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இரங்கல் தீர்மானமும் தாக்கல் செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly Mourning for moovarasanpet accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->