கள்ளச்சாராயம்: இனி ஆயுள் தண்டனை! ரூ.10 லட்சம், சொத்துக்கள் பறிமுதல் - அதிரடி சட்டத்திருத்தம்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 65 பேர் பலியாகி உள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட 100க்கும்  மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கள்ளச்சாரய விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் இதுவரை  21 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இரண்டு டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட ஒன்பது போலீசாரிடம் விசாரணை நடத்தவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

நேற்று தமிழக சட்டப்பேரவையில் உள்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை தலைவர் ஜி கே மணி, கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து சில கேள்விகளை எழுப்பி இருந்தார். 

அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து கள்ளக்குறிச்சி விவகாரத்தை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். என்னை பொறுத்தவரை உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களை காய்ச்சுதல், விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையானதாகவும் இல்லை. 

எனவே இது போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி, இந்த குற்றங்களை முற்றிலும் தடுக்க முதல் கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 திருத்த மசோதா நாளை (இன்று) சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியதும் தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட முன் வடிவை மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில், சற்று முன்பு இந்த சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டு, முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றி வருகிறார். 

இந்த சட்ட திருத்தத்தின்படி கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 10 லட்சம் அபராதமும் விதிக்க இந்த சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

மேலும் கள்ளச்சாராய குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்துள்ளது. 

இது மட்டுமில்லாமல் ஜாமின் முறிவினை நிறைவேற்ற நிர்வாக துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க சட்ட திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly New Law for Kallasarayam Culprits


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->