சென்னையில் சோகம் - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது.!
four peoples sucide at one family in chennai thirumangalam
சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் பாலமுருகனின் மனைவி சுமதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஜஸ்வந்த் குமார் மற்றும் லிங்கேஷ் குமார் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதற்கிடையே மருத்துவர் பாலமுருகனுக்கு ரூ.5 கோடி அளவிற்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குடும்பத்தினர் நான்கு பேரும் அவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
English Summary
four peoples sucide at one family in chennai thirumangalam