அனல் பறக்கும் தேர்தல் களம் - திறந்த வாகனத்தில் முதலமைச்சர் தேர்தல் பிரச்சாரம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் மூலமாக  தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், வடசென்னை தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் ஜி.கே.எம். காலனிக்கு உடபட்ட தெருக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தவெளி வாகனத்தில் நின்று வாக்கு சேகரித்தார். 

திறந்த வாகனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்த போது சாலையில் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள், மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காஞ்சீபுரம் தி.மு.க. வேட்பாளர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு உள்ளித்திரை ஆதரித்து இன்று மாலை பிரசாரம் செய்ய இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm mk stalin election campaighn in kolathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->