கோவில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அதிரடி உத்தரவு.!
TN government allowances increase to temple employees
கோவில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை நான்கு சதவிகிதம் உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் பெறக்கூடிய திருக்கோவில்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் அகவிலைப்படி 42% ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.
ஆனால், அந்த அகவிலைப்படியை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பணியாளர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஜூலை 1-ந்தேதி முதல் கணக்கிட்டு அகவிலைப்படியை மேலும் 4% உயர்த்தி 46% ஆக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதே சமயத்தில் கோவில்களில் பணிபுரியும் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
TN government allowances increase to temple employees