தமிழக அரசின் திட்டங்களை அறிய வாட்ஸ் அப் சேனல்.! - Seithipunal
Seithipunal


பொது மக்கள் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு முனைப்பான திட்டங்களை தீட்டி சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது.

பொதுமக்கள் அனைத்து திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொண்டு பயனடைய துணை புரியும் வகையில் தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ட்விட்டர் மற்றும் youtube போன்றவற்றில் பக்கங்கள் தொடங்கி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

 மேலும் இதன் அடுத்த கட்ட முன்னெடுப்பாக அதிகாரப்பூர்வ கட்செவி whatsapp சேனல்  "TNDIPR, Govt of Tamilnadu" என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது அதில் பொதுமக்கள் இணைந்து அரசியல் திட்டங்கள் மற்றும் செய்திகளை தெரிந்து கொள்ள கீழ்கண்ட துலங்கல் குறியீடு ஸ்கேன் செய்ய வேண்டும்.

மேலும் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மேற்கண்ட சமூக வலைதள பக்கங்களை காண சிறிய அளவில் கொடுக்கப்பட்டுள்ள துலங்கல் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn government announce whatsapp channel


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->