கிளாம்பாக்கத்தில் மேம்பாலம்..! தமிழக அரசு முடிவு..! - Seithipunal
Seithipunal



சென்னையில் வாகன நெரிசலை குறைப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பேருந்து நிலையத்தை சென்னையில் இருந்து சுமார் 40 கி. மீ தொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் தமிழக அரசு அமைத்தது. 

இதையடுத்து சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தான் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலேயே நின்று விடுகின்றன.

எனவே கிளாம்பாக்கத்தில் இருந்து வேறு வகையில் தான் மக்கள் சென்னைக்குள் சென்று கொண்டிருந்தனர்.  அப்போதும் நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியவில்லை. மேலும் கிளம்பாக்கத்தை நிலையத்திற்கு வர போதிய பேருந்து வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்நிலையில் தமிழக அரசு கிளாம்பாக்கத்தில் மேலும் சில வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி தற்போது கிளாம்பாக்கத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக தமிழக அரசு அங்கு  மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் விரைவில் இங்கு மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து தமிழக அரசு கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில்நிலையம் மற்றும் மின்சார ரயில் நிலையங்களும் அமைக்க திட்டமிட்டுள்ளதக தெரிய வந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Government Decided to Build a Flyover in Kilambaakkam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->