ரூ.15 லட்சம் வரை கடன் - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு சிறு, குறு தொழிலாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றாக, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதரா மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதாவது, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய உதவி செய்யப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் தனிநபர் மற்றும் குழுக்கடன்கள் வழங்கி வருகிறது.

அதன் படி, தமிழக அரசு மகளிர், ஆண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு சிறுதொழில் மற்றும் வணத்திற்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வட்டி 6% என்றும், திரும்ப செலுத்தும் காலம் இரண்டு ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn government fifteen lakhs loan provide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->