தமிழகத்தில் டீசல் பேருந்துகள் சி.என்.ஜி பேருந்துக்களாக மாற்றம் - வெளியானது அதிரடி அறிவிப்பு.!
tn government transport department decide diesel buses convert to cng buses
தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்துகளில் டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் உள்ளூர், வெளி மாவட்டங்கள் என்று பல வழித்தடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் டீசல் எரிப்பொருளில் இயங்கி வரும் நிலையில், எரிப்பொருள் தட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக பேருந்துகளை சி.என்.ஜி கேஸ் எரிபொருள் முறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதன்படி தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக, ஆயிரம் பேருந்துகள் சி.என்.ஜி. பேருந்துகளாக மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் 8 லட்சம் கி,மீக்கு குறைவாக இயக்கப்பட்டவையாகவோ அல்லது 6-7 ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட பேருந்துகளாகவோ இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.70 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tn government transport department decide diesel buses convert to cng buses