14.86 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு தொடக்கம் - தமிழக அரசு உத்தரவு.!
tn governmnet order new bank account open for ration card without bank account
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டை தாரர்களில் 14.86 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை.
அவ்வாறு வங்கி கணக்கு வைத்திருந்தாலும், அத்துடன் ஆதார் எண்ணை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களில்ன் விபரங்களை பெறவும், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 'ஜீரோ பாலன்ஸ்' அதாவது பணமில்லா வங்கிக் கணக்கை தொடங்கவும் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, வங்கிக் கணக்கு எண் இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு விவரக் குறிப்புகள் அடங்கிய தாளுடன், அருகில் இருக்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைக்கு நேரில் சென்று 'ஜீரோ பாலன்ஸ்' கணக்கை தொடங்க வேண்டும்.
மக்கள் கணக்கை தொடங்குவதற்கான விபரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து நான்கு நாட்களுக்குள் அந்தந்த நியாய விலைக் கடைகளில் ஒப்படைக்க வேண்டும்.
மக்கள் ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைப் பணியாளர் அவர்களது குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, அவர்களின் வங்கி கணக்கு எண், வங்கி கனக்குப் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் அவற்றுடன் ரேசன் அட்டை எண், குடும்பத் தலைவர் பெயர் போன்றவற்றை குறிப்பிட்டு வழங்கும்படி அவர்களை அறிவுறுத்தி, அந்தத் தகவல்களை கேட்டுப் பெறவேண்டும்" என்று அந்த ரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tn governmnet order new bank account open for ration card without bank account