இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்! திமுக தரப்பில் வெளியான அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை ஆளுநர் மாளிகையில் நடக்க உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நாளில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்தளிப்பது வழக்கம். 

அந்த வகையில் நாளைஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு, அனைத்து கட்சி அரசியல் தலைவர்களுக்கும் ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

ஆளுநர் மாளிகையின் இந்த தேநீர் விருந்தில் அதிமுக கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுதந்திர தினத்தன்று ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக அரசு சார்பில் பங்கேற்பது குறித்து முதலமைச்சர் இன்று மாலை முடிவு செய்வார் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது திமுகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

குறிப்பாக காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் எதிராக ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாக கூறி, இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Governor Tea Party DMK 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->