தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால்... அரசு அலுவலகங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அரசு நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்காவிட்டால், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, தமிழ் வளர்ச்சித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் ஆட்சி மொழி சட்டத்தின் படி தமிழகம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள், அலுவலகங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஆனால், இந்த சட்டத்தை பெரும்பாலான தனியார் நிறுவனங்களும், வியாபாரிகளும் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு துறைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள துறைகளிலும், ஆங்கிலத்தில் மட்டுமே பெயர்ப்பலகைகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:- "தமிழ் ஆட்சி மொழி சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அதை மீறுவது அரசு துறையாக இருந்தாலும், 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதனால், உடனே தமிழில் பெயர்ப்பலகையை வைக்க வேண்டும். ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ பெயர் பொறிக்க விரும்பினால், தமிழ், ஆங்கிலம், பிற மொழியில் 5:3:2 என்ற விகித அளவில் எழுதிக்கொள்ளலாம்" என்றுத் தெரிவித்திருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt announce 2000 fine to govt office for wothout tamil name board


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->