மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு.!
TN govt increase physical Challengers pension
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி 22,300 மாணவர்கள் பயன்பெறும் வகையில் 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 30000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாகவும், 9ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 4000 ரூபாயிலிருந்து 8000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 6000 ரூபாயில் இருந்து 12000யாகவும், தொழிற்கல்வி மற்றும் முதுகலை படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 7000 ரூபாயிலிருந்து 14,000 ரூபாயாகவும் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
English Summary
TN govt increase physical Challengers pension