நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர்... 51,414 வழக்குகள் பதிவு - தமிழக அரசு பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது குறித்து 51,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், வழக்கறிஞர், என ஸ்டிக்கர்கள் ஒட்டக்கூடாது என போக்குவரத்து காவல்துறை தடை விதித்துள்ளது. மேலும் இந்த தடையை மீறினால் போக்குவரத்து காவல் துறை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நடவடிக்கையை தமிழக முழுவதும் அமல்படுத்த கோரி தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் விதிகளை மீறி ஸ்டிக்கர் ஒட்டி இருந்ததாக 51,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ. 2.57 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே மாதம் வரை சன் கன்ட்ரோல் ஃபிலிம் ஒட்டியதாக 6279 வழக்குகள் பதிவு செய்து ரூ. 31.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt number plates Sticker 51414 cases registered 


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->