மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகள் விற்பனை செய்ய வேண்டும் - தமிழக அரசு அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளுக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக மாநில அரசு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக அரசு தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் உள்ள சில்லரை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா? என்பதை உறுதி செய்ய மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளால் சோதனைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. 

அப்போது சென்னையில் பெருங்குடி திருமலை நகர் பகுதியில் ஒரு மருந்து கடையில் வலி நிவாரணி மருந்துகளை பெருமளவில் வாங்கி மருத்துவரின்  பரிந்துரைசீட்டு மற்றும் விற்பனை ரசீதுகள் எதுவும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

உடனே அந்த கடைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். மேலும் மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்டத்தின்கீழ் அந்தக் கடையின் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டு, அதன் உரிமமும் ரத்து செய்யப்படும். 

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து சில்லரை மருந்து விற்பனை நிறுவனங்கள், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுப்பதற்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என்று மீண்டும் அறிவுறுத்தப்படுகின்றனர்" என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN govt order to medicines sales to only doctor prescription in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->