விடுதலை போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.!
tn govt pension money increased to rtd independent leaders
கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்பட்ட சுதந்திர தின விழாவில் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
முதல் அமைச்சரின் இந்த அறிவிப்பின் படி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதாவது, விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு, மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்தில் இருந்து ரூ.11,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோரின் வழித்தோன்றல்கள் பெறும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
tn govt pension money increased to rtd independent leaders