சட்டசபை கூட்டத்தொடர் - பொங்கலுக்கு பிறகு நடத்த அரசு திட்டம்.!
tn govt plan to assembly meeting after pongal
தமிழகத்தில் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்றது. அந்த கூட்டத் தொடரை தமிழகத்தின் கவர்னர் இன்று முடித்து வைத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தின் முதல் வாரத்தில் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். ஆனால், இந்த முறை தற்போது பெய்த மழை பாதிப்பு காரணமாக நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதால் 2023ஆம் ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடரை பொங்கலுக்கு பின்பு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் முதலில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவார். இதைத்தொடர்ந்து அவரது உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் வாசிப்பார். அத்துடன் அன்றைக்கான சட்டசபை கூட்டம் நிறைவடையும்.
சட்டசபையின் முதல் கூட்டத்தில், தமிழக அரசின் ஒராண்டுக்கான செயல்திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். அதுமட்டுமல்லாமல், இந்தி திணிப்பிற்கு எதிரான கருத்துகள், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்டவையும் உரையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
English Summary
tn govt plan to assembly meeting after pongal